• தொடர்புக்கு +91-9655552259
 • trustee@kamarajartrust.com
 • முகப்பு   /   எங்களைப்பற்றி

  எங்களைப்பற்றி


  காமராஜர் டிரஸ்ட் அரசு அங்கிகாரத்துடன் (பதிவு எண்: 42/2016) 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது, காமராஜர் டிரஸ்ட் பல்வேறு தொழில் துறையில் செயல்புரியும் திரு. Dr. கார்த்திகேயன் என்பவரால் கல்வி மற்றும் நலிந்தோர் துயர் துடைக்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. தற்போது பல்வேறு சமூக பணிகளில் தன்னை அர்ப்பணித்து அனுபவம் நிறைந்த திருமதி. கலைவாணி மற்றும் திரு. Dr. கார்த்திகேயன் ஆகியோரால் வழி நடத்தி செல்லப்படுகிறது.

  ஆயினும் பல்வேறு அறக்கட்டளை செயல்பாடுகள் மற்றும் அனைத்து சமூக பணிகளில் தங்களை அர்ப்பணித்து வாழும் நிர்வாக குழுவில் இடம் பெற்று இருக்கும் பலரின் வழிகாட்டுதலின்படி திறம்பட செயல்பட்டு வருகிறது.

  காமராஜர் வரலாறு:


  தாயார் பெயர் சிவகாமி அம்மாள் அவர்களுக்கும் தந்தை குமாரசாமி நாடார் அவர்களுக்கும் மகனாக 1903–ம் வருடம், ஜிலை மாதம் 15–ம் தேதி, விருதுப்பட்டியில் (தற்போது விருதுநகர்) காமராஜர் பிறந்தார்.
  அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால், அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ”தந்தையோடு கல்விபோம்” – என்பதற்கு ஒப்ப, காமராஜரின் தந்தை குமாரசாமி நாடாரின் மறைவிற்குப் பின் காமராஜரின் பள்ளிப்படிப்பு முற்றுப்பெற்றது. பின் தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்து பணியாற்றிய இவர் பின்னர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்து நடத்திய காசியாராயண நாடார் மரக்கடையிலும் சிறிது காலம் வியாபாரத்தில் ஈடுபட்டார்.
  காமராஜர் தனது இளம் வயதிலேயே, விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்குப் போகலானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. காமராஜர் இளம் வயதில் கேட்ட பொதுக் கூட்டங்களே அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது. அவரது கவனமெல்லாம் தேச விடுதலையிலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றார். காங்கிரஸ் பேரியக்க உறுப்பினராகி முழு நேரத் தேசப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.


  காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 10 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.


  1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) மதிய உறக்கத்திற்குப் பின்னர் அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.